உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்யாவில் கத்திக்குத்து தாக்குதல்-சந்தேக நபர் கைது.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

ரஷ்யாவில் இந்தியர் ஒருவரைச் சேர்த்து எட்டு பேர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசின் தலைநகரமான உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


தகவலின்படி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த சந்தேகநபர் தன்னிடமிருந்த கத்தியால் அங்கிருந்த மாணவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.சந்தேகநபரை கைது செய்ய முயன்றபோது, அவர் காவல்துறையினரையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், அவர் தன்னைத்தானே கத்தியால் காயப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து, காவல்துறையினர் அவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடலின் பல பகுதிகளில் காயமடைந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்குதலுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதலின் நோக்கம் என்ன என்பது தொடர்பிலும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0