உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழ் வடமராட்சியில் இனங்காணப்பட்ட மோட்டார் வகைக் குண்டு .!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தனிப்பனை பகுதியில் இன்று (07) பிற்பகல், வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு ஒன்று இனங்காணப்பட்டது.குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள், ஆடு மேய்ப்பதற்காக காட்டுப் பகுதியைச் சென்ற போது அந்த குண்டை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்கள் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.


சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஆபத்தான நிலையில் காணப்பட்ட மோட்டார் வகைக் குண்டை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்காக கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவு கோரியுள்ளனர்.நீதி மன்ற உத்தரவு கிடைக்கும் வரை, மருதங்கேணி பொலிஸார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0