உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மதுவரி திணைக்களத்தில் டிஜிட்டல் நவீனமயமாக்கல் மூலம் வருமான சேகரிப்பு மேம்பாடு – அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புதல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதை தொடர்பான இணக்கப்பாடு, கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


இந்த கலந்துரையாடலில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரச வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பணியக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க கலந்து கொண்டனர்.அதாவது, மதுவரித் திணைக்களத்தின் வினைத்திறனை மேம்படுத்தி வருமான சேகரிப்பை உயர் மட்டத்திற்கு கொண்டு சேர்ப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கம்.


மேலும், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை, புதிய சீர்திருத்தங்கள், மனித வள அபிவிருத்தி, உத்தியோகத்தர்களின் நலன்கள் உள்ளிட்ட விஷயங்களையும் இந்நிகழ்வில் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.இதில் மதுவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0