மின்சார தாக்கத்தில் சிக்கிய தாய், மகள் உயிரிழப்பு.!
கலகா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயாரும் 13 வயதுடைய மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், கருவேப்பிலை மரத்தில் இலை பறித்துக் கொண்டிருந்தபோது தரையில் விழுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இம்மரணங்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகா பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.