தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு.!
சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் நோக்கிச் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்தவர் “பியூச்சர் லைஃப்” எனும் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்