உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கரைவலை மீனவர்களின் சத்யாகிரகப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாக்கிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் டி. கமகேவுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துத் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அத்துடன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் நேற்று மாலை மீனவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சு, கரைவலை மீன்பிடி ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பாகச் செயற்படுவதால் சுற்றாடலுக்குக் கடும் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0