வந்தாறுமூலை பெருவெளி, குளத்துவட்டை கண்டங்களில் நெற்பயிர் அறுவடை திகதி தீர்மானம்.!
மட்டக்களப்பின் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை கமநல அமைப்புகளில் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் அறுவடையை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று (07.02.2026) காலை 09.00 மணியளவில் நடைபெற்றது.இந்த கூட்டம் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய மண்டபத்தில், பெருவெளி மற்றும் குளத்துவட்டை கண்டங்களின் கமநல நிர்வாகிகளின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகளின் எதிர்கால நடவடிக்கை மற்றும் அறுவடை திகதி பற்றி விரிவாக ஆராயப்பட்டு, பெருவெளி மற்றும் குளத்துவட்டை கண்டங்களின் அறுவடை பணிகள் 13.02.2026 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தீர்மானம் எட்டப்பட்டது.இக் கலந்துரையாடலில் இரு கண்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.அறுவடைப் பணிகளை எவ்வித தடையுமின்றி சுமூகமாக முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகளை கமநல அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

