உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

எதிரணிகள் ஆட்சிக் கனவுகள் இனி நனவாகாது-என்.பி.பி. அரசு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது என்று ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.சஜித் அணிக்கோ அல்லது ரணில் அணிக்கோ அல்லது ராஜபக்ஷ அணிக்கோ ஆட்சியமைக்கும் கனவு இருந்தால் இப்போதே அந்தக் கனவைக் கலைத்துவிட வேண்டும் என்றும் ஆளும் தரப்பு வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மென்மேலும் வலுப்பெற்று வருகின்றது. இந்த ஆட்சியை எந்தத் தரப்பாலும் அசைக்க முடியாது. பல தசாப்தங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடர நாட்டு மக்கள் அடித்தளம் வைத்துள்ளனர்.

ராஜபக்ஷக்களின் குழந்தை நாமல் ராஜபக்ஷ இனவாதத்தைக் கக்கி எம்மை ஒன்றும் செய்ய முடியாது. அவர் சிறுபிள்ளைத்தனம் கொண்டவர் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் படுதோல்வியடைந்தமையை மறக்கக் கூடாது.

சஜித் பிரேமதாஸ் கடந்த இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக வர முயன்றார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.திருடர்களைப் பாதுகாத்த ரணில் விக்கிரமசிங்கவும் குறுக்கு வழியில் மீண்டும் ஜனாதிபதியாக வரலாம் என்று கனவு காண்கின்றார். அந்தக் கனவு இனி நனவாகாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0