உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு நாள் நடைபவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது
மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி தனது 80வது ஆண்டு நிறைவு நாளையொட்டி நடைபவனியை இன்று (07-02) சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில், பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் இந்த நடைபவனி ஆரம்பமானது.
நடைபவனியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகரசபை ஆணையாளர் மற்றும் பழைய மாணவர் என். தனஞ்செயன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா மாஸ்டர் உருவப்படத்தை மாணவர்கள் தாங்கிச் சென்றனர்.


இந்தப் பேரணியில் பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பெருமளவில் கலந்துகொண்டனர்.மூன்று இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கண்காட்சி பவனி மற்றும் பல்வேறு வகையான வாகனங்கள் பேரணியை சிறப்பித்தன.பேரணி புகையிரத நிலைய வீதி, அரசடி பல்கலைக்கழக சுற்றுவட்டம், திருமலை ஊடாக தண்டவன்வெளி வரை சென்று மீண்டும் புகையிரத நிலைய வீதியூடாக பாடசாலைக்கு திரும்பி முடிவடையப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0