உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அவசரகால சட்டம் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்படமாட்டாது – ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும் அது ஒருபோதும் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கண்டி – நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டிட்வா சூறாவளியால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களின் மீள்குடியமர்த்துவதற்காக காணி வழங்குதல் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோசமாக இனவாதம் மாறிவிட்டது.வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது.நமது மிகப்பாரிய பலம் ஒற்றுமை என்றும், நமது நாட்டின் முக்கிய பலம் நாம் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது என்றும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும்.கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

நமது அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு அரசியல் மேடையிலும் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதே முக்கிய தலைப்பாக இருந்தது.முன்னாள் தலைவர்கள் அதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.அதன்படி, நமது நாட்டில் அரசாங்கங்கள் மாறியபோது, மோசடி மற்றும் ஊழல் ஒரு முக்கிய தலைப்பாக மாறியது.

நமது நாட்டின் அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் மோசடி மற்றும் ஊழல் பற்றிய ஒரு முழக்கம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.மேலும், இந்நாட்டின் அரசியல் மேடையில் ஜனநாயகம் ஒரு முக்கிய தலைப்பாக மாறிவிட்டது. தேர்தல்களை ஒத்திவைப்பது, பத்திரிகையாளர்களைக் கொல்வது, வீதிகளில் இடம்பெறும் கொலைகள் பற்றிப் பேசப்பட்டது.இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாது.

அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகம் பற்றிய முழக்கத்தை எழுப்ப வாய்ப்பு இருக்காது.மேலும், அரசியல் மேடைகளில் பொருளாதார வீழ்சிச பற்றி தொடர்ந்து பேசப்பட்டது. இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாது.அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகம் பற்றிய முழக்கத்தை எழுப்ப வாய்ப்பு இருக்காது.

மேலும், அரசியல் மேடைகளில் பொருளாதார வீழ்சிச பற்றி தொடர்ந்து பேசப்பட்டது.நமக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகள் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது பற்றிய முழக்கங்களை அரசியல் மேடையில் முன்வைக்க வாய்ப்பு இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0