உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கனிம அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

புதிய தேசிய கனிமக் கொள்கை முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் வரை, நாட்டில் கனமான கனிமங்களை அகழ்வதற்கான அனைத்து வகையான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்தார்.

புதிய தேசிய கனிமக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று, அது நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும்.குறிப்பாக இல்மனைட், ரூட்டைல், சிர்கான் மற்றும் கார்னட் போன்ற பெறுமதிமிக்க கனமான கனிம வகைகளுக்கே இந்தத் தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முறையான கொள்கைத் திட்டம் வகுக்கப்படும் வரை நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0