உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான கினிகத்தேன பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் சமய தலைவர்களின் அனுஸ்டானங்களை தொடர்ந்து இன்று (06) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது .

பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த இடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் போர்டுலேண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்ததாரரான சீன நிறுவனத்தின் பொறியாளர்களால் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட பொல்பிட்டிய சந்தியில் உள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் நிலங்களை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு, கட்டிடங்களை ஒரு பொலிஸ் நிலையமாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.பொல்பிட்டிய பொலிஸ் எல்லைக்குள் உள்ள 7 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த 2465 குடும்பங்களைச் சேர்ந்த 7569 பொது மக்களை பொல்பிட்டிய பொலிஸாரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறி, ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0