பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கைது.!
சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மான் ஒன்றைக் கொன்றது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு கட்டளைச் சட்டத்தை மீறியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நாளை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.மேலும் மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.