உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் விசேட மரநடுகை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மரநடுகை வேலைத்திட்டம், இன்று (2026.02.06) முற்பகல் ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், அரச நிறுவன வளாகங்களைப் பசுமையாக்குவதும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரி சுந்தர அவர்களின் வழிகாட்டலும் ஒருங்கிணைப்பும் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் மாவட்ட நீதிபதி திரு. ஏ. பீற்றர் போல் அவர்கள் கலந்து கொண்டு, அடையாள ரீதியாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பெறுமதிமிக்க பல மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்நிகழ்வில் ஹட்டன் நீதிமன்ற பதிவாளர் இசுரு சேனானந்த, ஹட்டன் பொலிஸ் சுற்றாடல் பிரிவின் அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0