உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டம் ஆளுநரிடம் கையளிப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
34 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘2026 – 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்’ இன்று (06) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்திடம் இத்திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையிலான விசேட நிபுணர் குழுவினரால் இந்தத் தந்திரோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் மொத்தம் 431 சுற்றுலா மையங்கள் இத்திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.யாழ்ப்பாண மாவட்டம்: 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 200 மையங்கள், முல்லைத்தீவு மாவட்டம்: 77 மையங்கள், கிளிநொச்சி மாவட்டம்: 56 மையங்கள், வவுனியா மாவட்டம்: 49 மையங்கள், மன்னார் மாவட்டம்: 49 மையங்கள்.

இவற்றில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னுரிமை அடிப்படையில் தலா 10 சுற்றுலா மையங்களும், மாகாண மட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தலா 2 சுற்றுலா மையங்களுமாக மொத்தம் 10 மையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு சுற்றுலா மையமும் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணம், அங்குள்ள சுற்றுலா வாய்ப்புகள், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், வடக்கின் சுற்றுலாவில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள், பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என அனைத்துத் தரவுகளும் இந்த மூலோபாயத் திட்ட நூலில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.திட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

‘இந்தச் சிறந்த திட்டத்தை வெறும் ஆவணமாக மட்டும் வைத்திருக்காது, இதனைச் செயற்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.மேலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சுற்றுலா மையத்தையும் சுற்றுலாப் பணியக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்துரையாடி, அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மன்னார் மாவட்டச் செயலர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உதவிப் பிரதம செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர், 5 மாவட்டச் செயலகங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், திட்டத்தைத் தயாரித்த வவுனியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0