உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அவசரகாலச் சட்டம் நீடிப்பு; சஜித் அணி கடும் எதிர்ப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார்.

அவசரகாலச் சட்டத்தை இந்த அரசு ஒடுக்குமுறைக்காகப் பயன்படுத்துகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எனவே, அந்தச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் இந்தக் குற்றச்சாட்டைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நிராகரித்தார்.

அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பு விதிகளின் கீழ், ஜனாதிபதியால் ஒரு மாத காலத்துக்கு மட்டுமே அவசரகால நிலையை அறிவிக்க முடியும்.

அதனை நீடிக்க வேண்டுமெனில் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

அதற்கமையவே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0