பெருந்தோட்டக் கம்பனிகளின் விளையாட்டை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.!
“சம்பள உயர்வு வருவதற்கு முன்னரே பெருந்தோட்டக் கம்பனிகள் விளையாட்டை ஆரம்பித்துள்ளன. இந்த விளையாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.