உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பெருமளவான போதைப்பொருட்களுடன் சிக்கிய பெண்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

பொரலெஸ்கமுவ, நிர்மல மாவத்தை பகுதியில் ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஆவார்.

பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண் வீடமைப்புத் தொகுதி ஒன்றில் தற்காலிகமாக வீடொன்றைப் பெற்றுத் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 17 கிலோ கிராம் ஹேஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 1 கோடியே 50 இலட்சம் (ஒன்றரை கோடி) ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவருக்கு எதிராக ஏற்கனவே 4 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0