உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானில் இருக்கும் அமெரிக்கர்களை வெளியேற உத்தரவு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
48 பார்வைகள்

ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன. ஈரான் அதிகாரிகள் இணையத்தை முடக்கி இருக்கின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு, வீதிகள் மூடல்கள், பொதுப் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் இணையத் தடைகள் ஆகியவை தொடர்ந்து நீடிக்கின்றன. ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்கர்கள் இப்பொழுதே ஈரானை விட்டு வெளியேறுங்கள். உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு பாதுகாப்பான கட்டடத்தில் ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக தங்கி இருங்கள். உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்திருங்கள்.

ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். தற்போதைய செய்திகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0