யாழில் நோயாளர் காவுவண்டி விபத்து.!
சாவகச்சேரி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நோயாளர் காவுவண்டி ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நாவற்குழிப் பகுதியை நோயாளர் காவுவண்டி கடக்க முயன்றபோது, வீதியின் குறுக்கே வந்த மாட்டுடன் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இதன்போது வாகனத்தின் முன்பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வாகனம் சேதமடைந்த போதிலும், அதிலிருந்த நோயாளி, மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சாரதி ஆகியோருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து நோயாளி உடனடியாக மாற்று வாகனம் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.