உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; இளைஞன் உட்பட மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு – மீரிகம வீதியின் கந்தவல பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு நோக்கிச் சென்ற உந்துருளி, வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர், அதில் பயணித்த ஒருவர் மற்றும் பாதசாரி படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதன்போது, உந்துருளி ஓட்டுநர் மற்றும் பாதசாரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆனமடுவ – நிக்கவரடிய வீதியில் 96 ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எதிர்த் திசையில் வந்த உந்துருளி, ஆனமடுவ நோக்கிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநர் ஆனமடுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஆனமடுவ, பெரியதக்குளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய, லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

37 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

79 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

71 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0