உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான சிறப்புரிமை தொடர்பில் ஒரு பிரச்சினையை முன்வைத்த பின்னர், அது தொடர்பாக அரசு கவனம் செலுத்தாத போது தொடர்ந்து கேள்விகள் கேட்பது எதிர்க்கட்சித் தலைவராக தனது பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரோஹண பண்டார எம்.பிக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு இன்னும் வழங்கப்படாமையினால் அது தொடர்பாக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, அனுராதபுரம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பாதுகாப்புப் பிரிவுகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி ரோஹண பண்டார எம்.பிக்கு உரிய பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இவை உட்கட்சிப் பிரச்சினைகள் என்று கூறி இப்பிரச்சினையை வேறு பக்கத்துக்குத் திசை திருப்ப அரசு முயற்சிக்கின்றது என்றும், அவருடன் எந்தவொரு கட்சிப் பிரச்சினையும் இல்லை என்றபடியால், அவருக்கு உரிய பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

37 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

79 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

71 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0