உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மன்னார் – புத்தளம் பிரதான பாதை மூடப்பட்டால் பேரழிவு உறுதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

100 வருடம் பழமை வாய்ந்த புத்தளம் – மன்னார் பாதையை திறந்து மக்களுக்கு இலகுபடுத்தி கொடுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அரசுக்கு நாடாளுமன்றில் வேண்டுகோளினை முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த தேர்தல்களின் போது மன்னாருக்கு வேட்பாளராக வந்த ஜனாதிபதி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பாதையை திறந்து மக்களுக்கு வசதி செய்து கொடுப்பதாக கூறினார்.

இந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கின்ற விமல் ரத்நாயக்க தொடர்பில் எம்மிடத்தில் மதிப்பிருந்தது. ஆனால் இன்று அவரது பதில் அதை உடைத்து எறிந்துவிட்டது.

இந்த அரசு கொண்டு வருகின்ற அனைத்து நல்ல விடயங்களையும் நாங்கள் நேர்மையுடன் பார்த்து வந்துள்ளதுடன், அதற்கு எதிராக நாடாளுமன்றில் நாம் பேசியதில்லை.

ஆனால் துரதிஷ்டம் தற்போது தான் புரிகிறது இந்த அரசும், ஜனாதிபதியும், அமைச்சர்களும், இவர்களுக்கு கீழ் வருகின்ற இரண்டு நிறுவனங்களும் இந்த புத்தளம் – மன்னார் பாதையினை நிரந்தமாக மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த பாதை திறப்பது தொடர்பில் தூர நோக்கு சிந்தனையுடன் செயற்பட்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் இது இழுத்து மூடப்பட்டது. அன்று வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வனவிலங்கு திணைக்களம் என்பன மக்களின் பக்கம் நின்று இந்த பாதை மக்களுக்கு பயணத்திற்காக வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தார்கள்.

ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் அவர்கள் வெளிநாட்டு நிதிகளை அண்டி வாழும் அமைப்புக்களுடன் இணைந்து இந்த பாதையை நிரந்தரமாக மூட ஒத்துழைப்பு நல்குவது பெறும் துரோகமும், அநியாயமாகும்.

இந்த பாதையானது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாறாக தமிழர்களுக்கும், அது போன்று அனைவருக்கும் பொதுவானது. அதனை திறப்பதன் மூலம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் அனைவருக்கும் 100 கிலோமீற்றர் குறைந்த தூரத்தை கொண்டதாக இருப்பது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் இது முக்கியமானதாகும்.

அன்று நான் அமைச்சராக இருந்த போது எடுத்த முயற்சியால் இந்த பாதையினை திறந்து மக்களுக்கு பயண வசதிகள் செய்து கொடுத்தோம். அப்போது கூட பெரும்பான்மை இனவாதத்தை கொண்ட சிலர் இதற்கெதிராக செயற்பட்டது மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள பெரும்பான்மை ஊடகங்களும் இந்த பாதையினை மையப்படுத்தி பல்வேறு இனவாத கருத்துக்களை விதைத்தனர்.

வடக்கில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மன்னார் காற்றாலை அமைக்க ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பை அடுத்து எம்மையும், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்து இந்த திட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்த உதவுமாறு வேண்டினார்.

அப்போதும் நாங்கள் தெளிவாக சொன்னோம். மக்களின் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்று. மன்னார் – புத்தளம் பாதையினை திறந்து மக்களது அத்தியாவசிய தேவையை செய்து கொடுங்கள் என்று வலியுறுத்தினோம்.

78 ஆவது இலங்கையின் சுதந்திரத்தை அரசு கொண்டாடிய போது வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்கள் அன்றைய தினத்தை கரிநாளாக கொண்டாடியதோடு, தமது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். ஆனால் நாங்கள் உங்களிடம் நாட்டை பிரித்து கொடுங்கள் என்று கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மன்னார் – புத்தளம் பாதை தொடர்பாக வன்னி, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து இந்த பாதை தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டு இந்த பாதையை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்றும் றிசாத் பதியுதீன் கூறினார்.

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட அந்த வழக்கின் எதிரிகளோடும் சதிகாரர்களோடும் இந்த அரசாங்கம் இணைந்து இந்த பாதையை இழுத்து மூடுவதற்கு எடுக்கும் நடவடிக்கையானது பெரும் அழிவை தோற்றுவிக்கும் என்பதை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றும் தனது உரையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

37 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

79 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

71 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0