உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
60 பார்வைகள்

இந்தியாவிற்கான வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இதற்கான எல்லாப் பெருமையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியை சேரும் என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கியதால், 25 சதவீத அபராத வரி உட்பட 50 சதவீத அமெரிக்க வரிகளை இந்தியா எதிர்கொண்டது.தற்போது பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த காரணத்தால் இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தி உள்ளார்.மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர்

ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான உறவுக்கு நன்றி.இந்திய பொருடகள் மீதான இறக்குமதி வரிகளை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்து, அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தன.எல்லாப்புகழும் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கே சேரும்.இருநாட்டு தலைவர்களும் ஒரு சிறந்த தனிப்பட்ட உறவை கொண்டுள்ளனர்.இது ஒப்பந்தத்தை உறுதி செய்ய வழி வகுத்தது.

இது ஒரு புதிய சகாப்தம். உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி நிலைமையை அமைதிப்படுத்த வேண்டும்.ஜனாதிபதி டிரம்பைப் போலவே பிரதமர் மோடியும் அமைதியைக் கொண்டுவருவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். இவ்வாறு அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

42 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0