உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
46 பார்வைகள்

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என பாதுகாப்பு துறைக்கு வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை அளித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது.எனவும் கடந்த 10 ஆண்டுகளில் செலவிடப்பட்ட பணம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுத்துரைத்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு அடிப்படை உபகரணங்கள் இல்லாத ஒரு காலம் இருந்தது எனவும் நமது வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் கிடைக்கவில்லை எனவும் துப்பாக்கிகள் இருந்தாலும் அவர்களிடம் தோட்டாக்கள் இருக்காது எனவும் ஆனால் தற்போது தான் அந்த நிலை மாறி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முரண்பட்ட கோரிக்கையை நிர்வகிப்பது என்பது ஒவ்வொரு நிதியமைச்சரும் எதிர்கொள்ளும் பிரச்னையாகும் எனவும் கூடுதல் வளங்களைப் பெறுவதற்கு வரிகளை உயர்த்துவது எப்போதும் தீர்வாகாது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இதேவேளை, நெருக்கடியின் போது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு கணிசமாகக் கடன் வாங்க வேண்டியிருந்தது எனவும் தற்போது பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட உடன் கடனைக் குறைப்பதற்கும், நிதி சமநிலையை மீட்டெடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

42 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0