உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படவிருந்த 194 கிலோ கிராம் கஞ்சாவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் கியூ-பிரிவு பொலிஸார் நேற்று (02) பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக கார் ஒன்றை இடைமறித்து சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனை செய்தபோது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 97 மூட்டைகளில் 194 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்தனர்.இதையடுத்து பொலிஸார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், குறித்த காரின் சாரதியான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மணிகண்டன் (40 வயது) என்பவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கஞ்சா சென்னையில் இருந்து கடத்தப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவிருந்தது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக கியூ பிரிவு பொலிஸார் ராமநாதபுரம் போதைப்பொருள் புலனாய்வுப் பணியகத்திடம் (NIB) ஒப்படைத்துள்ளனர்.இந்தக் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்றவர்களை தற்போது விசாரித்து வருவதாக தமிழகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

42 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0