உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இன்று உலக சதுப்பு நில தினம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ‘உலக சதுப்பு நில தினமாக’ ராம்சார் சதுப்பு நில உடன்படிக்கையின் பொதுச் செயலகம் அறிவித்தது.பின்னர், இது ஐக்கிய நாடுகள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டது.

1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் (Ramsar) நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது.அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக இது விளங்குகின்றது.

அத்துடன் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வழங்குவதுடன், நீரைச் சேமித்து வைத்து வெள்ள அபாயத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் தடுக்கின்றது.மேலும் மனிதர்களின் நல்வாழ்விற்கு சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு அத்தியாவசியமானதாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு உலக சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாக “சதுப்பு நிலங்களுக்காகச் செயற்படுங்கள், இயற்கைச் சூழலுக்காகச் செயற்படுங்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0