உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அவுஸ்திரேலியாவில் பறிபோன கனேடிய பெண்ணின் உயிர்..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
41 பார்வைகள்

அவுஸ்திரேலியாவில் கனேடிய பெண்ணொருவர் மாயமான முறையில் உயிரிழந்த நிலையில், பிரித்தானிய பெண்ணொருவரின் டிக்டோக் காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்கிற 19 வயது பெண், அவுஸ்திரேலியாவின் K’gari என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் காட்டு நாய்களால் கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. உடற்கூறு ஆய்வில் அவரது உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன்பும், அவர் உயிரிழந்த பின்பும் காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.ஆனால், அப்பெண் காட்டு நாய்கள் அவரைத் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில், பைப்பர் ஜேம்ஸின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அதே தீவில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி எடுத்த காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில் குறித்த சுற்றுலாப் பயணி மில்லி மெக்கார்த்தி, அந்தத் தீவில் வாழும் காட்டு நாய்கள் குறித்த தெளிவான பாதுகாப்பு எச்சரிக்கைகளை அப்பட்டமாகப் புறக்கணித்ததாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மில்லி மெக்கார்த்தியின் டிக்டொக் காணொளியில், புதர்கள் நிறைந்த பகுதியில் தனியாக சுற்றித் திரிவதையும், அவர் காட்டு நாய்கள் எச்சரிக்கை பலகையை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.மேலும் அவர், ‘டிங்கோ குச்சி’ என்று அழைக்கப்படும் பாதுகாப்பு தடியை எடுத்துச் செல்வதா வேண்டாமா என்று அவர் வெளிப்படையாக விவாதிக்கிறார்.

இறுதியில் அவர் அதனை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்கிறார். அத்துடன் “இது மிகவும் பயமாக இருக்கிறது, ஏனென்றால் நான் இப்போது தனியாக முகாமை விட்டு வெளியேறப் போகிறேன்” என்று அவர் கமெராவில் கூறுகிறார்.இறுதியில் அவர் அதனை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்கிறார். அத்துடன் “இது மிகவும் பயமாக இருக்கிறது, ஏனென்றால் நான் இப்போது தனியாக முகாமை விட்டு வெளியேறப் போகிறேன்” என்று அவர் கமெராவில் கூறுகிறார்.

அடுத்த கிளிப்பில், அவர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கடற்கரையை அடைவது காட்டப்படுகிறது. இந்த டிக்டோக் காணொளியை பார்த்தவர்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலளித்த மில்லி, விதிகளை மீறுவது என்பது தற்செயலாக நடந்ததாகவும், வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0