உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வாவிக் கரையில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நுவரெலியா கிரகரி வாவிக் கரையில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் உயிர்காப்புப் பொலிஸார் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் ஆரம்ப விசாரணைகள் மற்றும் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

குறித்த சடலம் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதுடன் சிசுவின் தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதன் அடிப்படையில் குறித்த பிரசவம் வைத்தியசாலையில் இடம்பெறவில்லை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

46 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

65 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

58 0 0