உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
53 பார்வைகள்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் 28 உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் பெண் ஆயர்களை நியமிக்கவும் அனுமதித்தது. கத்தோலிக்க திருச்சபை என்றும் பெண்களை மதகுருமார்களாக அனுமதிக்காத நிலையில், இது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பழைமைவாத அங்கிலிக்கன் ஆயர்கள், பெண்கள் ஆயர் பதவியை வகிப்பதை எதிர்க்கின்றனர்.மாற்றுப் பாலினத் திருமணங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதை சாரா முல்லாலி ஆதரிப்பதால், ருவாண்டா போன்ற நாடுகளின் மதத் தலைவர்கள் இவரது தலைமைத்துவத்தை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி கென்டர்பரி கதீட்ரலில் நடைபெறும் விசேட வழிபாட்டுடன் அவர் முறைப்படி ஆயராகப் பொறுப்பேற்பார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0