உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இஸ்ரேலின் மொசாட் உளவாளிக்கு ஈரானில் நேர்ந்த கதி.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் தளவாட அமைப்புகளை உளவு பார்த்து, அந்த தகவல்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுக்கு வழங்கியதாக ஹமித்ரேசா சபேத் எஸ்மெயில்பூர் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, அவர் கடந்த 2025 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.ஈரானிய ஊடகங்களின் தகவலின்படி, இஸ்ரேலுக்கு உதவும் வகையில், ஏவுகணைத் தளங்களை குறிவைத்து உபகரணங்கள் வாங்கியது, வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை இடமாற்றம் செய்தது உள்ளிட்ட செயல்களில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக ஜனவரி 28 புதன்கிழமை அதிகாலை, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஜூன் மாதம் இஸ்ரேலுடன் ஏற்பட்ட 12 நாள் போருக்குப் பிறகு, ஈரான் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

அந்தப் போரின் போது, ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவங்கள், நாட்டிற்குள் இஸ்ரேல் உளவாளிகள் ஊடுருவியிருப்பதை வெளிச்சத்தில் கொண்டு வந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0