• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது.!

Mathavi by Mathavi
January 27, 2026
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0
டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது.!
Share on FacebookShare on Twitter

டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதுடன், அப்பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இணைத்தலைவராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
2026ஆம் ஆண்டு வடக்கை பொறுத்தவரையில் ஒரு ‘அபிவிருத்தி ஆண்டாக’ அமையவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு அதிகளவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாகாண சபையின் வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் எமக்குக் கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன. ஒதுக்கப்பட்ட நிதிகளை விட, மேலதிகத் திட்டங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் மேலும் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும், என்றார்.

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையுரையாற்றுகையில்,
மத்திய மற்றும் மாகாண நிதிகளுக்கு மேலதிகமாக, இவ்வாண்டு விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன, எனக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்புரையாற்றுகையில்,
2025 இறுதியில் ஏற்பட்ட டித்வா பேரிடர் நிவாரணப் பணிகளுக்குச் சிறப்பான அரசியல் தலைமைத்துவமும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் உரிய காலத்தில் வழங்கப்பட்டன. 2026இல் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மாவட்டத்தில் நிலவும் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இக்கூட்டத்தில், வடக்கு மாகாண சபைக்கு 2026ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த நிதியில் 20 சதவீதம், அதாவது 1,592 மில்லியன் ரூபா முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதியும் பெறப்பட்டது. பிரதேச செயலக மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத விடயங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இக் கூட்டத்தில் வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ து.ரவிகரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts

வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு.!

வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு.!

by Mathavi
July 10, 2026
0

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிட புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள்...

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
July 10, 2026
0

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த...

நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்.!

நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்.!

by Mathavi
July 10, 2026
0

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை...

தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைக் கூட்டம்.!

தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைக் கூட்டம்.!

by Mathavi
July 10, 2026
0

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உப குழுவின் மூன்றாவது கூட்டம்,...

சுகாதார சேவையை வலுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும்.!

சுகாதார சேவையை வலுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும்.!

by Mathavi
July 10, 2026
0

வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு...

தமிழர்களை பாதிக்கக் கூடிய மேலும் ஆபத்தான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.!

தமிழர்களை பாதிக்கக் கூடிய மேலும் ஆபத்தான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.!

by Mathavi
July 10, 2026
0

"சட்டங்களை வைத்து - சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து - கூடுதலாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களை ஒடுக்கும் சம்பவங்களே அதிகம் காணப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம்...

யாழில் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த குடும்பஸ்தர்.!

யாழில் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த குடும்பஸ்தர்.!

by Mathavi
July 10, 2026
0

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையை சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று...

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

by Mathavi
July 10, 2026
0

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த...

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

by selvan
July 9, 2026
0

டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று (09)...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி