உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லாகூர் ஹோட்டலில் தீ விபத்து- மூவர் பலி..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
53 பார்வைகள்

பாகிஸ்தானின் லாகூரிலுள்ள ஹோட்டலொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்தோடு 275பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தீ விபத்துக்கு உள்ளான கட்டடத்தில் சிக்குண்டிருந்தவர்களை அவசர அவசரமாக மீட்கும் பணியில் தீயணைக்கும் படை வீரர்கள் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.இது தொடர்பில் அந்த அதிகாரிகள் மேலும் கூறுகையில், லாகூரில் நூர் ஜெஹான் வீதியில் அமைந்துள்ள இண்டிகோ ஹோட்டலில் கல்லூரி ஒன்றின் வைபவமொன்று நடந்து கொண்டிருந்த போது இத்தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்ததும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பல தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன.

21 அவசர வாகனங்களும் சுமார் 80 மீட்புப் பணியாளர்களும் அதிகாரிகளும் இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றதாக மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். இத் தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஏழு பேர் வெளியேற்றப்பட்டனர், அவர்களில் சிலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0