அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஹவுதி கிளர்ச்சிக்குழு.!
பொருளாதார நெருக்கடி காரணமாக ஈரானில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரான் அரசு வன்முறையை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
வன்முறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கேற்ப அமெரிக்க போர்க்கப்பல் ஈரானை நோக்கி விரைந்துள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, “Soon” என குறிப்பிட்டுள்ளது. ஆனால் விரிவான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.