உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவைத் தாக்கும் சண்ட்ரா புயல்: விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
46 பார்வைகள்

பிரித்தானியாவில் இந்த மாதத்தில் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாக ‘சண்ட்ரா’ (Chandra) உருவெடுத்துள்ளது.ஏற்கனவே பிரித்தானியாவை தாக்கிய இரண்டு புயல்களைத் தொடர்ந்து, தற்போது சண்ட்ரா புயல் இன்று(27) பிரித்தானியாவை தாக்கப் போவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன்காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பாரிய அலைகள் எழுந்து வீதிகளுக்குள் புகுந்த அதிக சேதங்களை ஏற்படுத்தலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தென்மேற்கு இங்கிலாந்து பகுதிக்கு திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இங்கு 30-50 மி.மீ மழையும், உயர்ந்த பகுதிகளில் 80 மி.மீ வரையும் மழை பெய்யக்கூடும்.ஏற்கனவே நிலம் அதிக ஈரப்பதத்துடன் உள்ளதால், உடனடியாக வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகள் மற்றும் ஸ்கொட்லாந்தில் பலத்த மழை பெய்யும் அதேவேளை, அது பனியாக மாறவும் வாய்ப்புள்ளது.மலைப்பகுதிகளில் 5 செ.மீ முதல் 20 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்பதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0