உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பருத்தித்துறைக்கு தொழிலுக்கு சென்ற ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல்! எட்டு பேர் கைது..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு தொழிலுக்கு சென்றிருந்த போது, ஹட்டன் – நோர்வூட் வெஞ்சர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸாரால் குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நோர்வூட் பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நோர்வூட் வெஞ்சர் பகுதியிலிருந்து பருத்தித்துறைக்கு தொழிலுக்காக சென்றிருந்த இளைஞன் ஒருவர் மீதே, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஊடாக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

37 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

39 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

58 0 0