உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் 2 தராசுகள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே இந்த ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய உபகரணங்களை பொலிஸார் மீட்டெடுத்தனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0