உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அதிகார வெறியில் ஆட்சியாளர்கள்; நாட்டின் அடையாளங்களே ஆபத்தில்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தமது அரசைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் கலாச்சாரம், மதம், சட்டங்களுக்கு முரணாக வகையில் செயற்பட தற்போதைய ஆட்சியாளர்கள் தயாராக உள்ளமை அமைச்சர் லால் காந்தவின் உரையின் மூலம் தெளிவாகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கோர்ட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் என அமைச்சர் லால் காந்த கூறியமை சட்டத்தைத் தாக்குவதாகும். காவி அங்கி அணிபவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் பொருள் அரசில் உள்ளவர்கள் தங்கள் உயிர் வாழ்வுக்காக உள்ளூர் கலாச்சாரத்தையும் மதங்களையும் அழிக்கத் தயாராக இருக்கின்றனர் என்பதுதான்.

ஜனாதிபதியின் மனம் சிறிதளவு காயப்பட்டாலும், பொலிஸ்மா அதிபரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஏனைய அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு ஜனாதிபதியின் மனதை ஆற்றுப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.

மக்கள் ‘அன்தரே’யின் கதைகளைக் கேட்டு சிரித்துக் கைதட்டியதைப் போல இன்று பொய்களை நம்பி ஏமாந்துள்ளனர். இறுதியில் அன்தரே ராஜாவானதைப் போல, இன்று ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து தனது குரோதத்தையும் பொறாமையையும் வெளிப்படுத்துகின்றார்.

இந்த அரசிடம் நிலையான ஒரு கொள்கை இல்லை. 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 159 விதமான கொள்கைகளையே கொண்டுள்ளனர்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் யு. எஸ்.எய்ட் போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல்களை ஒரு குழு முன்னெடுக்கும் அதேவேளை, கட்சியின் ஆரம்பகாலக் கொள்கைகளை நம்பியிருந்த அடிமட்டத் தொண்டர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0