உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்ய எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய பிரான்ஸ்! வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
51 பார்வைகள்

சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் எண்ணெய் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடற்படையினால் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்தக் கப்பலின் இந்திய மாலுமி தற்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘தி கிரின்ச்’ (The Grinch) என்று பெயரிடப்பட்ட இந்த எண்ணெய் கப்பல், ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகமான முர்மான்ஸ்க்கில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது பிரான்ஸ் கடற்படையால் இடைமறிக்கப்பட்டது.இந்தக் கப்பல் கொமோரோஸ் தீவுகளின் கொடியுடன் பயணித்தாலும், உண்மையில் ரஷ்யாவிற்குச் சொந்தமானது என்றும், சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்கப் போலி அடையாளத்தைப் பயன்படுத்துவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய ‘நிழல் உலக’ கப்பல்கள் மூலம் கிடைக்கும் வருவாய், யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட உதவுவதாக மெக்ரோன் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பலின் மாலுமி 58 வயதுடைய இந்தியர் ஆவார்.

அவர் தற்போது மார்சேய் (Marseille) நகரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கப்பலில் இருந்த மற்ற மாலுமிகள் அனைவரும் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் தற்போது கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0