சுற்றுலாத்துறையில் இலங்கையின் அடுத்தகட்ட நகர்வு.!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை, இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கையின் சுற்றுலாத்துறையை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 20,000 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 40,000 அதிகரிப்பதற்கும், எதிர்வரும் காலத்தில் 100,000 அதிகரிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டுபாயில் நடைபெற்ற ‘இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா’ முதலீட்டாளர் மன்றத்தில் உரையாற்றிய இலங்கையின் தூதரக அதிகாரி, சுற்றுலாத்துறை மாத்திரமன்றி கட்டுமானம், விவசாயம் மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளிலும் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதற்காக வரிச் சலுகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரச சேவைகள் போன்ற ஊக்குவிப்பு திட்டங்களை இலங்கை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.