தெல்லிப்பளை மருத்துவமனை அத்தியட்சகருக்கு எதிராக விசேட விசாரணை..!
தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகருக்கு எதிராக, மருத்துவமுறைச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப விசேட குழு விசாரணைகளை முன்னெடுக்கிறது.
இந்த விசாரணையை வடக்கு மாகாண ஆளுநரால் அமைக்கப்பட்ட குழுவே மேற்கொண்டு வருகிறது.
மருத்துவமனை வாகனங்கள், எரிபொருள் பயன்பாடு, மருத்துவமனையில் ஏற்பட்ட ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விவகாரங்களையும் குழு ஆராய்ந்து வருகிறது என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, அத்தியட்சகரைப் பாதுகாக்க அரசியல் தலையீடு செய்யப்பட்டு வருகிறது என்று மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை முறையாகப் பின்பற்றி, நீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.