உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அமைச்சரின் பெயரை வைத்து பாரிய மோசடி.. அவதானம் தேவையென பொதுமக்களுக்கு வலியுறுத்து.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களிடம் பணம் கோரும் மோசடி நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பொது பதிவில், தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பொய்யாகக் கூறி நிதி உதவி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது குறித்து மறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், பணம் அல்லது முக்கியமான தனிப்பட்ட விபரங்களை தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், இவ்வாறான குற்ற சம்பவங்களைத் தடுக்க, சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாக பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு பிரதி அமைச்சர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். அத்துடன், மோசடிகளில் இருந்து மற்றவர்களைப் பாதுகாக்க, விழிப்புடன் இருக்கும் அதேநேரம், எச்சரிக்கையைப் பகிருங்கள் என அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

1 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0