உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பில் நடைபெற்ற அமரர் சி.மு. இராசமாணிக்கம் நினைவுகூறல் நிகழ்வு..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நினைவு நிகழ்வு, இன்று மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சாணக்கியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், நகர மற்றும் பிரதேசக் கிளை முதல்வர்கள், தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர்ப் பெருமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று அமரருக்கு அஞ்சலி செலுத்தினர்.


நிகழ்வின்போது, அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் அரசியல் பயணம், தமிழர் நலனுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் அவரது மக்கள் நேசம் குறித்து உரையாற்றப்பட்டு, அனைவராலும் நினைவு கூறப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

48 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0