உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தேசிய மாநாட்டின் மூலம் கட்சியை எழுச்சி கொள்ள வைப்போம் –டக்ளஸ் தேவானந்தா..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை மறுசீரமைத்து எழுச்சி கொள்ள வைப்பதற்குத் தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை, எதிர்காலத்தில் தாம் நேசிக்கும் மக்களிடம் வெளிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்

.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், அண்மையில் இடம்பெற்ற தன்னுடைய கைது சம்பவம் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும், மாற்றம் பற்றிய எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்திருந்த போதிலும், இதுவரையில் அந்த எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறாத நிலையே தொடர்கின்றது எனக் குறிப்பிட்ட அவர், பல்வேறு சவால்கள் நிறைந்த சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசுக்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே நியாயமான நிலைப்பாடாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,


எந்த அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து வழங்கப்போவதில்லை எனவும், நல்லெண்ணச் சமிஞ்ஞையும் சிநேகபூர்வ உரையாடலும் அடிப்படையாகக் கொண்டு, தேசிய நல்லிணக்கப் பாதையில் நின்றே நாமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.கடந்த கால அரசுகளும் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கிணங்க பல விடயங்களுக்கு தீர்வுகளை வழங்கியதாகவும், போதிய அரசியல் பலம் அக்காலங்களில் இருந்திருந்தால் இன்னும் முழுமையான பலன்களைப் பெற்றிருக்க முடிந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த கால அரசுகளுடன் ஆட்சியில் பங்கெடுத்திருந்த போதும், அவர்களோடு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், எனினும் பேசித் தீர்ப்பதற்கான ஒரு தளம் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்தத் தளம், ஆட்சிகளில் பங்கெடுத்திருந்ததாலேயே சாத்தியமானதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.அதேபோன்று, தற்போதைய அரசுடனும் கருத்து முரண்பாடுகள் உள்ளதாகவும், இருப்பினும் எதிர்ப்பு அரசியல் மேற்கொள்வோர்போல் கடும்போக்கில் அரசை விமர்சிக்க முடியாது என்றும் கூறினார்.


இந்த அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் வழங்கவில்லை என்றால், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசின் மீதே சுமத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் எவ்வாறு பேசி விடயங்களைப் பெற்றோமோ, அதுபோலவே தற்போதைய அரசுடனும் பேசியே பெற வேண்டிய நிலை உள்ளது என்றும் கூறினார்.ஆளும் கட்சி சார்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்குள் கரைந்து போயுள்ளதாகவும், அவர்களிடம் போதிய அனுபவமும் ஆற்றலும் அக்கறையும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்கள் தவிர்க்க முடியாமல் கட்டுப்பட்டிருப்பதாகவும், ஆகவே அரசுடன் நேரடியாக பேச வேண்டிய பொறுப்பு தமக்கே உரியது என்றும் கூறினார்.


எனினும், அரசுடன் பேசுவதற்கான உரிய பிரதிநித்துவமும் அதிகாரமும் தற்போது தம்மிடம் இல்லை என்றும், எதிர்காலத்தில் மக்கள் அந்த ஆணையை வழங்கும் பட்சத்தில், இந்த அரசுடனும் பேசி தீர்வு காணக்கூடிய தளம் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.இதனுடன், கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி கட்சி கட்டமைப்புகளை சீரமைத்து, பலவீனங்களை அடையாளம் கண்டு திருத்துவதன் மூலம் கட்சியை எழுச்சி கொள்ள வைக்க முடியும் என்றும், அதற்காக அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

1 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0