உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசியல் குழு ஆலோசனைக்கு செவிமடுக்காத சிறிதரன் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி மீளப்பெற தீர்மானம் – சுமந்திரன் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அரசியல்குழுவின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று பிற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,


பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவினாலேயே வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார். தேர்தல் முடிவடைந்த பின்னர் வவுனியாவில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில், அந்நேரத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.

அந்தக் கூட்டத்திலேயே தேசியப் பட்டியல் ஆசனத்தை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாகவும், அதேபோன்று அவருக்கு பாராளுமன்றக் கொறடா பதவியை வழங்கவும், பாராளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நியமிக்கவும் அரசியல்குழு தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.


மேலும், பாராளுமன்றக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அரசியல்குழுவே நியமித்ததாக சுமந்திரன் கூறினார்.நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, அரசியல்குழுவினால் வழங்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல்குழுவுக்கே உண்டு என்றும், எந்தக் குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கும் அதே குழுவுக்கே அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அரசியல்குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாக, அரசியல்குழுவினால் வழங்கப்பட்ட பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை மீளப்பெற தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.அரசியல்குழு அவர்மீது நம்பிக்கை வைத்து, ஏகமனதாக அந்தப் பதவியை வழங்கியிருந்ததாகவும், இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல்பேரவையிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசியல்குழு வழங்கியிருந்ததாகவும் கூறினார். நேற்றைய தினம் சுமார் நான்கு மணிநேரங்கள் அதே கருத்தை அவரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.


ஆகவே, கட்சியின் உயரிய குழு வழங்கிய பதவியை, அதே குழுவின் ஆலோசனையையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லை என்ற காரணத்தினால், அந்தப் பதவியை அவரிடமிருந்து மீளப்பெற தீர்மானித்ததாக சுமந்திரன் கூறினார்.இதனிடையே, இது தொடர்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுவரையில் அவ்வாறான எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

1 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0