உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல விரும்பும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் !

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
54 பார்வைகள்

கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) , கார்டன் மற்றும் டென்டன் (Gorton and Denton ) தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.உடல்நலக் குறைவால் (Andrew Gwynne) ஆண்ட்ரூ க்வின் விலகியதைத் தொடர்ந்து, இப்பதவிக்கு போட்டியிட தனது கட்சியின் தேசிய செயற்குழுவிடம் பர்ன்ஹாம் அனுமதி கோரியுள்ளார்.

அவர் வெற்றிபெற்றால் மேயர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், இது கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, கட்சியின் சில உயர்மட்ட தலைவர்கள் அவருக்கு ஆதரவு அளித்தாலும், லேபர் கட்சியின் தற்போதைய தலைமைக்கு அவர் ஒரு சவாலாக அமையலாம் என்ற கவலையும் நிலவுகிறது.

இந்நிலையில் மான்செஸ்டரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே தான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக விரும்புவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.இதேவேளை எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வு செயல்முறை இங்கிலாந்துய் அரசியலில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0