பாகிஸ்தானில் பனிச்சரிவு – ஒன்பது பேர் உயிரிழப்பு..!
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பனிப்பொழிவில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.
பனிப்பொழிவால் ஏற்பட்ட பனிச்சரிவுகள் கைபர், பக்துன்க்வா, பலுசிஸ்தான், கில்கிட்-பால்திஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. உறைபனிக்கு மத்தியில் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டன.
கைபர் பக்துன்க்வாவில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் தெற்கே உள்ள செரிகல் கிராமத்தில் உள்ள டாமில் பகுதியில் நேற்று (23) பிற்பகல் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் புதைந்துள்ளனர்.
குறித்த இடிபாடுகளிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டதாகவும், ஒன்பது வயது சிறுவன் உயிர் பிழைத்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளார்.நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகப்படியான பனிப்பொழிவையடுத்து மக்கள் அன்றாட வாழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.