உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
49 பார்வைகள்

கிரீன்லாந்தின் மீது கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கட்டமைக்கும் தனது திட்டத்தை கனடா எதிர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி நேரடியாக தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகிறார்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், ‘ராணுவ பலம், பொருளாதார பலமுடைய நாடுகள், அவற்றை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.அதே கூட்டத்தில், இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது எனவும் எங்களிடமிருந்து பல சலுகைகளை பெறும் அந்நாடுஇ நன்றியுடன் இல்லை’ எனவும் விமர்சித்தார்.

இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி, ‘அமெரிக்காவின் தயவால் நாங்கள் வாழவில்லை’ என பதிலளித்தார்.இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், ‘கனடா பிரதமர் கார்னிக்கு அமைதி வாரியத்தில் இணைய விடுத்த அழைப்பை ரத்து செய்கிறேன்’ என அறிவித்தார்.இந்நிலையில் இன்று மீண்டும் கனடா பிரதமர் மீது ஜனதிபதி டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு கிரீன்லாந்தின் மீது கட்டப்படுவது கனடாவைப் பாதுகாக்கும் என்றபோதிலும், கனடா அதற்கு எதிராக உள்ளது எனவும் அதற்குப் பதிலாக, அவர்கள் சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் எனவும் அந்தச் சீனா முதல் வருடத்திலேயே அவர்களை விழுங்கிவிடும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0