அவுஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கிச் சட்டத்திற்கு ஒப்புதல்.!
அவுஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து செனட் சபை அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் சட்டத்துக்கும் துப்பாக்கி உரிமங்களுக்கான பின்னணிச் சோதனைகளைக் கடுமையாக்கும் சட்டத்துக்கும் மக்களவை ஒப்புதல் அளித்தது.
கடந்த மாதம் 14ஆம் திகதி போண்டாய்க் கடற்கரையில் யூதத் திருவிழாவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து புதிய சட்டங்கள் அறிமுகமாகின்றன. உளவுத்துறை வசமுள்ள தகவல்களைக் கொண்டு துப்பாக்கி உரிமங்களைப் பெறுவோரின் பின்னணி சோதிக்கப்படும்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் மிக அதிகமாக 4 மில்லியன் துப்பாக்கிகள் இருந்ததாக அரசாங்கம் தெரிவித்தது. அவற்றில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவை, போண்டாய் தாக்குதல் நடந்த, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ளன.