உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பணிகளை நிறுத்திய ஐரோப்பிய நாடாளுமன்றம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
51 பார்வைகள்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பணிகளை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.கிரீன்லாந்து தீவைக் கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கைகள் மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது வரி விதிப்பதாக அவர் விடுத்த மிரட்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஸ்கொட்லாந்தின் டர்ன்பெரி (Turnberry) நகரில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருந்தது.இதற்காக எதிர்வரும் ஜனவரி 26, 27 திகதிகளில் நடைபெறவிருந்த வாக்கெடுப்புகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ட்ரம்ப் புதிய வரிகளை விதிப்பதாகக் கூறி மிரட்டுவது, ஏற்கனவே போடப்பட்ட டர்ன்பெரி ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்று ஐரோப்பிய வர்த்தகக் குழுவின் தலைவர் பெர்ண்ட் லாங் (Bernd Lange) தெரிவித்துள்ளார்.கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது பெப்ரவரி 1 முதல் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.இதற்குப் பதிலடியாக, ஐரோப்பிய ஒன்றியம் தனது “அழுத்த எதிர்ப்பு கருவியை” (Anti-coercion instrument) பயன்படுத்தி அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0